Thursday 31 March 2011

உழவன் மரணம்...

ஒரு உழவன் ஓராயிரம் உயிர்களுக்கு 
பசி போக்குபவன்.
அப்படிப்பட்ட உழவர்கள் - இன்று
வாழ வழியின்றி, உயிரை கொடுத்து
மரணத்தை வாங்குகின்றனர்!

மாண்டு போன விவசாயிகளின் மரண செய்தி இதோ!
"எந்த அறிவியலாலும் தீர்க்க முடியா
பசி பிணியை போக்கும்
 உழவன் மரணம் உலக பேரழிவின் ஆரம்பமாகும்"

இரத்தத்தை வியர்வையாக்கி,
உயிரை உரமாக்கி,
உழைக்கும் உழவர்கள் கடைசியில்
நஷ்டத்தை மட்டுமே
அறுவடை செய்கின்றனர்!

இதுதான் உலக நியதியா?
இல்லை ஆட்சியாளர்களின் அநீதியா?

இனியேனும் விளித்துக்கொள்வோம்!
ஒரு நூறு உயிர்களை இழந்தாலும்,
ஒவ்வொரு உழவனும்  காக்கப்படுவான்
என்று சட்டம் இயற்றுவோம்!

- கனிவைசீனு

Monday 28 March 2011

உழவே ஆதாரம்



சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்; அதனால்
உழந்தும் உழவே தலை.

-திருவள்ளுவர்
(திருக்குறள் (உழவு)- 104 :1)


பொருள்:

உலகம் பல தொழில் செய்து உழன்றாலும், ஏர்த்தொழிலின் பின் நிற்கிறது. அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.
.